Trending News

பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

அடுத்த சில நாட்களுக்கு பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

(UTV|COLOMBO)-நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

கிழக்கு, ஊவா மற்றும் வட மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளைகளில் மழை பெய்யக்கூடும்.

 

மேற்கு, வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும்; காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100மி.மீக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து மட்டக்களப்பு திருகோணமலை ஊடாக யாழ்ப்பாணம் வரையிலான கடற்கரையோரப்பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

சூரியனின் வடக்கு நோக்கிய தொடர்பான இயக்கம் காரணமாக இவ்வருடம் ஏப்ரல் 05 முதல் 15 வரை சூரியன் இலங்கையின் அகலாங்குகளுக்கு மேலாக உச்சம் கொடுக்க உள்ளது. இன்று நண்பகல் 12.11அளவில் கல்குடா, வெலிக்கந்தை, பொலன்னறுவை, அம்பன்பொல மற்றும் மதுரங்குளி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சத்தில் காணப்படும்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

More Minuwangoda unrest suspects out on bail

Mohamed Dilsad

Ex-New Zealand Prime Minister to receive Australia’s highest honour

Mohamed Dilsad

சீனாவின் நிதியுதவியுடன் ,ஏறாவூர் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி

Mohamed Dilsad

Leave a Comment