(UTV|COLOMBO)-வாகன சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான எழுத்து மூலப் பரீட்சையை எதிர்வரும் மே மாதம் 01ம் திகதி முதல் புதிய முறையில் நடத்துவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
எழுத்து மூலப் பரீட்சையில் இடம்பெறுகின்ற மோசடிகளை தடுத்தல் மற்றும் விரைவாக பெறுபேறுகளை வௌியிடுவது போன்ற காரணங்களுக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி கூறினார்.
அதன்படி முதலில் வெஹரஹர காரியாலயத்தில் புதிய முறையில் எழுத்து மூலப் பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தின் கடந்த காலப்பகுதியில் வாகனங்களை பதிவு செய்வது அதிகரித்திருப்பதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி கூறினார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]