Trending News

தேர்தல் கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் இதுவரை இல்லை

(UTV|COLOMBO)-கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு இதுவரையில் வழங்கப்படவில்லை என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கூறியுள்ளது.

அவர்களின் சொந்த பணத்தில் செலவு செய்து அந்த கடமைகளுக்காக சென்றிருந்த போதிலும் இதுவரை அதற்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாமை கவலைக்குறியது என்று அந்த சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க கூறினார்.

இது தொடர்பில் தேர்தல் திணைக்களத்திடம் வினவிய போது, அந்த ஆசிரியர்கள் வழங்கிய பற்றுச்சீட்டுக்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் அத தெரணவிடம் கூறினார்.

இந்த நிலமையை சீரமைத்து குறித்த கொடுப்பனவுகளை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

UK goes to polls in general election

Mohamed Dilsad

President to address UNEA-4 in Kenya today

Mohamed Dilsad

அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்களுக்கு விசேட அறிவுறுத்தல்

Mohamed Dilsad

Leave a Comment