Trending News

போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, சீமான், அமீர், கருணாஸ், கௌதமன் கைது

(UTV|INDIA)-கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் காவிரி மேலாண்மை அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்றிரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிகளை நடத்துவதற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதனால், ஐபிஎல் போட்டி வீரர்களுக்கும், போட்டி நடக்கும் மைதானத்திற்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அண்ணாசாலையைத் தாண்டி சேப்பாக்கம் மைதானம் நோக்கி செல்லும் சாலை முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா, கவிப்பேரரசு வைரமுத்து, சீமான், அமீர், கருணாஸ், கௌதமன் ஆகியோர் அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
சிறிது நேரம் கழித்து போலீசார் பாரதிராஜா, சீமான், அமீர், கருணாஸ் உள்ளிட்ட போராட்டகாரர்களை கைது செய்தனர். மேலும் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர் அனைவரையும் போலீசார் கலைந்து செல்லும் வலியுறுத்தினர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Sarfraz Ahmed: Pakistan captain banned over racist comment by ICC

Mohamed Dilsad

Chamal and Welgama obtains letters to contest Election

Mohamed Dilsad

ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் பிடியாணை

Mohamed Dilsad

Leave a Comment