(UDHAYAM, COLOMBO) – ஆனமடுவ பல்லம பிரதேசத்தில் காணி ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 147 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்ட பிரதி காவற்துறைமா அதிபர் சம்பிக்க சிறிவர்தனவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று இந்த முற்றுகை இடம்பெற்றுள்ளது.
இந்த கேரள கஞ்சா தொகை இந்தியாவில் இருந்து இந் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் சிலாபம் – மாரவில பிரதேசத்தை சேர்ந்தவர்களுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் காவற்துறையால் முன்னெடுக்கப்படுகிறது.