Trending News

மாந்தை மேற்கு பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்…

(UTV|COLOMBO)-வடமாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்துவந்த இரண்டு சபைகளையும் அம்பாறை மாவட்டத்தில் காலாகாலமாக முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையில் இருந்துவந்த நிந்தவூர் சம்மாந்துறை பொத்துவில் ஆகிய பிரதேச சபைகளையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றி இருப்பது அக்கட்சியின் கணிசமான வளர்ச்சியையும் அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆளுமையையுமே புலப்படுத்தி நிற்பதாக நம்பப்படுகின்றது.

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகர சபையில் ஒரேயொரு உறுப்பினர்களை மாத்திரம் கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் அதே மாவட்டத்தில் மூன்று சபைகளை கைப்பற்றி இருப்பதை ஓர் அபார வெற்றியாகவே கருத வேண்டியுள்ளது.

அது மாத்திரமின்றி வடக்கிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் கோட்டையை தகர்ப்பதென்றால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மீது தமிழ் மக்கள் கொண்டிருக்கும் அன்பையும் அவர் மீதுகொண்ட நம்பிக்கையையும் அவர் மக்களுக்கு ஆற்றிவரும் பணிகளையுமே எடுத்துக் காட்டுகின்றது.

தமிழ்த் தேசியத்துக்குள் வளர்க்கப்பட்ட மன்னார் மாவட்ட தமிழ் மக்களின் மனமாற்றத்தை இது வெளிப்படுத்துகின்றது. உதாரணமாக தமிழ் மக்கள் செறிந்து வாழும் மாந்தை மேற்கு பிரதேசத்தில் 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான மக்கள் காங்கிரஸ் கணிசமான வெற்றிகளை பெற முடியாத போதும், கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் அண்ணன் செல்லத்தம்பு தலைமையில் ஐதேக வின் யானை சின்னத்தில் போட்டியிட்டு பதினோரு ஆசனங்களை பெற்றிருப்பது அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இன, மத பேதமில்லாத பணிகளுக்குக் கிடைத்த பிரதிபலனே.

அதுவும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் கீழான முக்கிய கிராமமான விடத்தல் தீவு பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடமாகாண அமைச்சர் குணசீலனின் பூர்வீகக் கிராமமாகும். அத்துடன் அதே பிரதேசத்தில் உள்ள அடம்பன், முன்னாள் வடமாகாண அமைச்சரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான டெனீஸ்வரனின் சொந்தக் கிராமமுமாகும். இவ்வாறான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகார பலத்துக்குள் நின்றுகொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசியல் செய்வதென்பது வியத்தகு சாதனையே.

மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடும் போக்காளர்களான சார்ள்ஸ் நிரம்லநாதன், மாகாண சபை உறுப்பினர் சிராய்வா போன்றவர்களுக்கு மத்தியிலே போராட்டம் நடாத்தி மன்னார் பிரதேச சபையை மக்கள் காங்கிரஸ் வெற்றிகொண்டுள்ளது.

அதேபோன்று, முசலிப் பிரதேச சபை, ஓட்டமாவடி பிரதேச சபை ஆகியவற்றை மீண்டும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பல்வேறு சதிகளைத் தாண்டி தம்வசமாக்கியுள்ளது.

தேர்தல் காலங்களிலே இவ்விரண்டு பிரதேச சபைகளையும் தமதாக்கிக்கொள்வோம் என்று மேடைகளிலே வாய் கிழிய கத்தியோர் இன்று வெட்கித் தலை குனிந்துள்ளனர்.

முஸ்லிம் காங்கிரஸின் இதயம் என வர்ணிக்கப்படும் அம்பாறை கோட்டைக்குள் ஊடுருவி மூன்று சபைகளை கைப்பற்றிய ஆத்திரத்திலும், ஆவேசத்திலும் இருந்த அக்கட்சியின் தலைமையும், முக்கியஸ்தர்களும் வடமாகாணத்தில் முஸ்லிம்களுக்கு உரித்தான ஒரேயொரு முஸ்லிம் பிரதேச சபையான முசலிப் பிரதேச சபையை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்று துடியாய்த் துடித்தனர்.

தேர்தல் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினரான எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த ரயீஸ் என்பவரின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வைத்து, முசலிப் பிரதேசத்தைச் சேர்ந்த பண்டாரவெளி விரிவுரையாளர் நியாஸ் என்பவரை அந்தப் பதவிக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை நியமித்தமையும் இந்த வியூகத்தின் அடிப்படையிலேயே.

முசலிப் பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், முத்தலிப் பாவா பாரூக்   சபையில்  அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Australian Army given new terror powers

Mohamed Dilsad

சர்வதேச சுற்றுலா அமைப்பின் அறிவிப்பு…

Mohamed Dilsad

“Looking forward to Party Leaders’ meeting” – Rishad Bathiudeen

Mohamed Dilsad

Leave a Comment