Trending News

கதாநாயகியாக அறிமுகமாகும் கல்பனாவின் மகள்

(UTV|INDIA)-மறைந்த பிரபல நடிகை கல்பனாவின் மகள் ஸ்ரீசங்க்யா மலையாளத்தில் தயாராகும் ‘குஞ்சியம்மாளும் அஞ்சமக்காளும்’ என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.

கடந்த 2016 இல் மரணம் அடைந்த பிரபல நடிகை கல்பனா தமிழில் பாக்யராஜின் சின்ன வீடு படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக கார்த்தி, நாகார்ஜுனாவுடன் தோழா படத்தில் நடித்தார். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருந்தார். சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.

தற்போது கல்பனாவின் மகள் ஸ்ரீசங்க்யா மலையாளத்தில் தயாராகும் ‘குஞ்சியம்மாளும் அஞ்சமக்காளும்’ என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.

இதில் இர்ஷாத், கலாபவன் ஷாசான், பஷனம் ஷாஜி, ஸ்ரீஜித் ரவி, பினு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகி வரும் இப்படத்தை சுமேஷ் லால் இயக்குகிறார்.

கலாரஞ்சனி, கல்பனா, ஊர்வசி ஆகிய மூவரைத் தொடர்ந்து அவர்கள் குடும்பத்தில் இருந்து ஸ்ரீசங்க்யாவும் சினிமாவுக்கு வந்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கூரிய ஆயுதங்களுடன் இருவர் கைது

Mohamed Dilsad

Why Gigi Hadid, Kendall Jenner made Hailey Baldwin insecure

Mohamed Dilsad

ஹொங்கொங்கில் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுப்பு

Mohamed Dilsad

Leave a Comment