Trending News

மருத்துவ பீடத்தின் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-கொழும்பு பல்கலைக்கழக கல்வி பீடத்தின் முதலாமாண்டு மாணவர்களுக்கும் மருத்துவ பீடத்தின் சகல மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், மாணவர்களுக்கான விடுதிகள் திறக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, கல்வி பீடத்தின் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஆண்டு மாணவர்கள் உள்ளிட்ட ஏனைய சகல பீடங்களினதும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகின்றன.

அந்த மாணவர்களுக்கான விடுதிகள் எதிர்வரும் 22ஆம் திகதி திறக்கப்படும் என்றும் பதிவாளர் அறிவித்துள்ளார்.

இதனிடையே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் தொழிநுட்ப பீடங்களின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக பதிவாளரினால் நேற்று இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

விடுதி வசதி பெற்றுக்கொண்ட மாணவர்கள் அனைவரும் எதிர்வரும் 21,22ஆம் திகதிகளில் விடுதிக்கு திரும்ப முடியும் என்றும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக பல்கலைக்கழகங்களின் கற்றல் நடவடிக்கைகள் சுமார் ஒருமாத காலமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

JO to Election Commission today

Mohamed Dilsad

President Sirisena launches several new projects

Mohamed Dilsad

Talks fail, train strike launched

Mohamed Dilsad

Leave a Comment