Trending News

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச சபை மக்கள் காங்கிரஸ் வசம்!

(UTV|COLOMBO)-முல்லைத்தீவு மாவட்டத்தில், மாந்தை கிழக்கு (பாண்டியன் குளம்) பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளராக போட்டியிட்ட மகாலிங்கம் தயானந்தன் (நந்தன்) 07 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

இவருக்கு ஆதரவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 04 வாக்குகளும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 02 வாக்குகளும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 01 வாக்கும் கிடைக்கப் பெற்றன.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சி.செந்தூரன் 06 வாக்குகளைப் பெற்றார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 06 வாக்குகள் மாத்திரமே இவருக்குக் கிடைத்தன.

இந்த சபையில் பிரதித் தவிசாளராக போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஆர்.சிந்துஜன் 07 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 04 வாக்குகளும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 02 வாக்குகளும், ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் 01 வாக்கும் இவருக்குக் கிடைத்தது.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சி.ராஜேஸ்வரி 06 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்ட மற்றுமொரு தமிழ்ப் பெருமகன், மாந்தை கிழக்கு பிரதேச சபையில் தவிசாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றமையானது, முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசியல் வரலாற்றில் மற்றுமொரு திருப்புமுனையாகவே நோக்கப்படுகின்றது.

ஏற்கனவே மன்னார், மாந்தை மேற்குப் பிரதேச சபையின் தவிசாளராக செல்லத்தம்பு ஐயாவும், வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக தமிழ்ப் பெண்மணி ஒருவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டிருப்பதாவது, அக்கட்சித் தலைவர் ரிஷாட் பதியுதீனின் இன, மத, பேதமற்ற சேவைக்கு முத்தாரம் வைப்பதாகவும், மக்கள் காங்கிரஸுக்கு கிடைத்த அங்கீகாரமாகவும் கருதப்படுவதாக அரசியல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Lewis Hamilton wins in Russia after team orders

Mohamed Dilsad

Oil dips on US inventory build, defies OPEC-led cut efforts

Mohamed Dilsad

கடலில் மூழ்கிய இலங்கையரை மீட்ட தமிழக மீனவர்கள்

Mohamed Dilsad

Leave a Comment