Trending News

மெக்ஸிக்கோ குத்துச்சண்டை வீரர் அல்வரஸூக்கு 6 மாதகால போட்டித்தடை

(UTV|MEXICO)-மெக்ஸிக்கோ குத்துச்சண்டை வீரரான அல்வரஸூக்கு 6 மாத கால போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெக்ஸிக்கோவின் பிரபல குத்துச்சண்டை வீரரான Alvarez, Saul ‘Canelo’ போட்டிகளில் பங்கேற்பதற்கான 6 மாத கால தடை நேற்று விதிக்கப்பட்டது.

அவர் மீது மேற்கொள்ளப்பட்ட போதைப் பொருள் பாவனை பரிசோதனையில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து Saul ‘Canelo’ Alvarezக்கு இந்தப் போட்டித்தடை விதிக்கப்பட்டுள்தாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கஸகஸ்தானின் மத்திய எடை உலக சம்பியனான Gennady Golovkin உடன் மே மாதம் 5 ஆம் திகதி Alvarez போட்டியிட இருந்த நிலையில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் தான் உட்கொண்ட இறைச்சி தொடர்பில் இவ்வாறான சம்பவத்தை எதிர்நோக்க நேரிட்டதாக Alvarez தன் தரப்பு நியாயத்தை வௌிப்படுத்தியுள்ளார்.

எனினும் Alvarez வருகின்ற ஆகஸ்ட் மாதம் மீண்டும் கோதாவில் பங்கேற்க முடியும் என சர்வதேச ஊடகங்களை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அரசியல் கட்சி உறுப்பினர்கள் – தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் இடையே சந்திப்பு

Mohamed Dilsad

Colombia’s Lerma joins Bournemouth in club record £25m deal

Mohamed Dilsad

மியான்மருக்கு அழுத்தம் கொடுங்கள்-ஷேக் ஹசினா

Mohamed Dilsad

Leave a Comment