Trending News

இலங்கைக்கு பொதுநலவாய கண்டல் தாவர பாதுகாப்பு முயற்சிகளை தலைமை தாங்கி வழிநடத்தும் பொறுப்பு

(UTV|COLOMBO)-பொதுநலவாய இராஜ்ஜியத் தலைவர்களது மாநாட்டுடன் இணைந்ததாக அவ்வமைப்பின் நிறைவேற்றுச் சபைக் கூட்டம் நேற்று இடம்பெற்றது.

 

இந்தக் கூட்டத்தில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றுவதாக இருந்தது. நிறைவேற்றுச் சபையின் கூட்டத்திற்காக வருகை தந்த ஜனாதிபதியை பிரிட்டன் பிரதமர் தெரேசா மே அம்மையார் வரவேற்றார். இந்தச் சபையில் பொதுநலவாய அங்கத்துவ நாடுகளின் இராஜ்ஜியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

 

இந்த அங்கத்துவ நாடுகள் மத்தியில் கண்டல் தாவரங்களைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு தலைமை தாங்கும் நாடாக இலங்கை பிரேரிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் இடம்பெற்ற இராஜ்ஜியத் தலைவர்களது மாநாட்டிற்கு இடையில் இந்தப் பிரேரணை குறித்த அறிவித்தல் வெளியாகியது. இதன் பிரகாரம் இலங்கையின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்படும். உலகெங்கிலும் கண்டல் தாவரங்களை பாதுகாக்கும் வழி வகைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுப்பது குழுவின்பொறுப்பாகும்.

 

2015ம் ஆண்டுக்குப் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இலங்கையில் கண்டல் தாவர பாதுகாப்புத் திட்டம் அமுலாகிறது. இதற்குக் கிடைத்த வெற்றிகரமான பெறுபேறுகள் உலகின் கவனத்தை ஈர்த்திருந்தன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தெமட்டகொடையில் தொடர் குடியிருப்புகளில் தீப்பரவல்

Mohamed Dilsad

புஞ்சி பொரள்ளையில் இருந்து மருதானை நோக்கிய வீதியில் கடும் வாகன நெரிசல்

Mohamed Dilsad

பிரதமரின் செயலாளர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலை

Mohamed Dilsad

Leave a Comment