(UTV|COLOMBO)-பயணிகளுக்கு கட்டணப் பட்டியலை வழங்க முடியாத முச்சக்கர வண்டி சாரதிகள் உரிய தகவல்கள் அடங்கிய கட்டணப் பட்டியலை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி பாதுகாப்புக்கான தேசிய கவுன்சில் இதனை தெரிவித்துள்ளது.
பயணிகளுக்கு கட்டணப் பட்டியலை வழங்கக்கூடிய மீற்றர் அளவீட்டுக் கருவியை முச்சக்கர வண்டிகளில் பொருத்தும் நடவடிக்கை இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாடுமுழுவதும் அனைத்து முச்சக்கரவண்டிப் பயணங்களின்போது பயணிகளுக்கு கட்டணம் பட்டியல் ஒன்றை வழங்க வேண்டும்.
கட்டணப் பட்டியலை வழங்காத முச்சக்கர வண்டிகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் முறையிடும் வாய்ப்பும் பயணிகளுக்கு ஏற்படுத்தப்படவுள்ளது.
குறித்த கட்டணப் பட்டியலை வழங்கக்கூடிய மீற்றர் அளவீட்டுக் கருவியைப் பொறுத்துவதற்காக முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு ஆறு மாத சலுகைக்காலம் வழங்கப்பட்டிருந்தது.
அந்த சலுகைக் காலம் இன்று முடிவடைவதாக வீதிப் போக்குவரத்து தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
தாம் பயணித்த தூரம் எவ்வளவு? அதற்கான கட்டணம் எவ்வளவு? என்பதை இந்த கட்டணப் பட்டியல் மீற்றர் அளவீட்டுக் கரு மூலம் பயணிகள் அறிந்துகொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த சட்டம் தொடர்பில் முச்சக்கரவண்டிச் சாரதிகள் சங்கமும் சாரதிகளும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறான சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும், அவற்றை நடைமுறைப்படுத்த முடியாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி தொழில் முயற்சியாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் எம். ஜே. திஸாநாயக்க மற்றும் முச்சக்கர வண்டி தொழிற்சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
குறித்த மீற்றர் அளவீட்டுக் கருவியை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு அவற்றை விற்பனை செய்து கொடுப்பதற்காக எடுக்கப்படும் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அரசாங்கம் தரமான மீற்றர் அளவீட்டுக் கருவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கும்வரை இந்த மீற்றர் அளவீட்டுக் கருவியை தாம் பொறுத்தப்போவதில்லை என்றும் அந்தச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]