Trending News

DFCC வங்கி தமது கடனட்டைகளை சிறப்பு நிகழ்வொன்றுடன் மீள் அறிமுகம்

(UTV|COLOMBO)-DFCC வங்கி தமது கடனட்டைத் தெரிவுகளைக் கடந்த, மார்ச் மாதம் 28ஆம் திகதி சினமன் க்ரான்ட் – கொழும்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விஷேட நிகழ்வின் போது அறிமுகப்படுத்தியது. இந்நிகழ்வில் பெரும் திரளான வாடிக்கையாளர்கள், முக்கிய நபர்கள், பணிப்பாளர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரிகள், உயர் நிர்வாகிகள் மற்றும் தொழிற்துறை தலைவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஓர் சிறிய திருப்பமாக வங்கி வழங்கும் பல்வேறு வகையான அட்டைகளைச் சித்தரித்து பேஷன் ஷோ ஒன்றும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

கடனட்டைகளைக் கொண்ட முதல் செட்டினை முன்னாள் தலைவர், திரு. ராஜன் பிரிட்டோ மற்றும் DFCC வங்கியின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரிகளான திரு. மொக்செவி ப்ரெலிஸ்க்கும், திரு. நிஹால் பொன்சேகாவுக்கும், திரு. அர்ஜூன் பர்னான்டோவுக்கும் மற்றும் DFCC வர்தன வங்கியின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. எல். ஜீ. பெரேரா ஆகியோருக்கும் DFCC வங்கியின் தலைவரான திரு. ரோயில் ஜான்ஸ், பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. லக்ஷ்மன் சில்வா மற்றும் உப பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. திமல் பெரேரா ஆகியோரால் கையளிக்கப்பட்டது.

புதிதாக மீள் அறிமுகப்படுத்தப்பட்ட DFCC வங்கியின் இக்கடனட்டைகள் ஒவ்வொரு பாவனையின் போதும் (swipe) 1% பண மீள் வழங்கலைச் செய்கிறது. இது இலங்கையின் வங்கித்துறையில் முதன்முறையாகும். DFCC வங்கிக் கடனட்டைகளினால் அதன் அட்டைதாரர்களுக்கு அவர்கள் கடனட்டையினை பாவிக்கும் ஒவ்வொரு முறையும் அவர்களது கணக்குக்கு 1மூ பணம் மீள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் தமது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மடங்கு மகிழ்வினை வழங்குகிறது.

பண மீள் வழங்கலைச் செய்திடும் இச்சிறந்த அனுகூலத்துக்கு மேலதிகமாக DFCC கடனட்டைகளான – கோல்ட், பிளடினம், சிக்னேச்சர் மற்றும் DFCC ப்ரீமியர் விசா இன்பினிட் கடனட்டைகளுக்கு ஒரு புதிய நேர்த்தியான தோற்றம் வழங்கப்பட்டுள்ளதுடன் விசா பேய்வேவ் தொடர்பற்ற தொழில்நுட்பம் (Visa Paywave contactless) மற்றும் EMV chip செயற்படுத்தப்பட்டுள்ளது.

´எமது அனைத்து கடனட்டைகளுக்குமுள்ள 1% பண மீள் வழங்கல் சலுகை மற்றும் விசா பேய்வேவ் செயற்படுத்தப்பட்டுள்ளமையானது எமது வாடிக்கையாளர்களின் வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான எமது அர்ப்பணிப்பினை பிரதிபலிக்கிறது.´ என DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. லக்ஷ்மன் சில்வா தெரிவித்தார். ´எமது அட்டைதாரர்கள் பெரும் அனுகூலங்களையும் விஷேட சலுகைகளையும் எதிர்ப்பார்க்கின்றனர் என்பதனை நாம் அறிவோம். அத்துடன் அவர்கள் DFCC கடனட்டைகளை பாவிப்பதன் மூலம் பாதுகாப்பான கட்டண முறைமையை பயன்படுத்துகிறார்கள் என்பதனையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இத்தேவைகள் மற்றும் எதிர்ப்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதன் மூலம் எமது வாடிக்கையாளர்களின் மனதை பூரணப்படுத்தவும் மகிழ்வுறச் செய்யக்கூடியதாகவும் இருப்பதுடன் அவர்கள் கடனட்டையினை பாவிக்கும் ஒவ்வொரு முறையும் 1% பணத்தொகை மீள் வழங்கப்படுவதால் அது மேலும் சம்பூரணப்படுகிறது.´

அட்டைதாரர்களுக்கு 0% தவணைத் திட்டச் சலுகை முறைமைகளும் வழங்கப்படுகிறது. அத்துடன் flexi திட்டங்கள், 51 நாட்களுக்கு வட்டியற்ற கடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டிலுள்ள எந்தவொரு ATM வலையமைப்பிலும் முற்பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அணுகக்கூடியமை, நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு துணை அட்டைகள், DFCC ஒன்லைன் கட்டண முறை மூலம் அல்லது DFCC வர்ச்சுவல் வொலட் மூலம் பணம் செலுத்துதல், DFCC வங்கியின் 24 * 7 பணப் பரிமாற்றக் கண்காணிப்பு மற்றும் இலவச SMS அலர்ட்கள் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. உங்களுக்கு உரித்தான DFCC கடனட்டைகளைப் பெற்றுக் கொள்வதற்கு DFCC வங்கியின் 24 மணிநேர வாடிக்கையாளர் அழைப்பு நிலையத்துக்கு, 011 2 350 000 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்க.

DFCC சிக்னேச்சர் மற்றும் DFCC விசா இன்பினிட் கடனட்டைதாரர்களுக்கு அவர்கள் பயணம் செய்யும் போது சிறப்பு அனுகூலங்கள் பலவற்றைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். DFCC கடனட்டை மூலம் விமான டிக்கட்டுக்கள் கொள்வனவு செய்யும் போது அலயன்ஸ் காப்புறுதி நிறுவனத்தினால் வழங்கப்படும் இலவச பயணக் காப்புறுதி, உலகம் முழுவதுமுள்ள 900க்கும் மேற்பட்ட விமான நிலையங்களின் லோன்ஜ்களுக்கு இலவச அனுமதி மற்றும் உலகளாவிய விற்பனைப் பங்காளர்களுடன் தனித்துவமான விசா சலுகைகள் போன்றவையும் வழங்கப்படுகின்றன.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Protests continue against SAITM

Mohamed Dilsad

மூன்று இளைஞர்களால் வண்புனர்வுக்கு உள்ளான சிறுமி செய்த காரியம்

Mohamed Dilsad

“Stern action against saboteurs” – Prime Minister

Mohamed Dilsad

Leave a Comment