Trending News

சாப்பிட்டுகிட்டு குரல் கொடுத்த சமந்தா

(UTV|INDIA)-நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் தமிழிலும், ‘மகாநதி’ என்ற பெயரில் தெலுங்கிலும் உருவாகி வருகிறது. இப்படத்தை நாக் அஷ்வின் இயக்கி வருகிறார். சாவித்ரி 1950, 60-களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்து பல அற்புதமான படங்களில் நடித்துள்ளார்.

இதில் சாவித்ரியின் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷும், ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மானும் நடித்துள்ளனர். சமந்தா ரிப்போர்டராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். மேலும் முக்கிய பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது நடிகை சமந்தா, தனது காட்சிகளுக்கான டப்பிங் பணியை முடித்திருக்கிறார். அதுவும் பன் சாப்பிட்டுகிட்டே டப்பிங் பேசி முடித்திருக்கிறார். இதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார் சமந்தா.
இப்படத்தை வருகிற மே 9-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

A turtle caught by Indian fishers set free by Navy [VIDEO]

Mohamed Dilsad

ரஞ்சித் டி சொய்சாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை [VIDEO]

Mohamed Dilsad

Smith offers “Jay and Silent Bob Reboot” update

Mohamed Dilsad

Leave a Comment