Trending News

மனித உரிமைகள் அமர்வில் அரசாங்கம் நல்லிணக்க செயற்பாடுகளுக்காக மேற்கொண்ட நடவடிக்கைள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கும் – பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜக்கிய நாடுகள்  மனித உரிமைகள் அமர்வில் சமகால அரசாங்கம் நல்லிணக்க செயற்பாடுகளுக்காக நாட்டில் மேற்கொண்ட  நடவடிக்கைள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

கொழும்பு பாரன் ஜயதிலக்க மாவத்தையிலிருந்து செலிங்கோ கட்டடத்தின் இரண்டாவது மாடிக்கு இடமாற்றப்பட்ட இலங்கை வெளிநாட்டு அலுவல்கள்கன்சியூலர் அலுவலகத்தில் பணிகள் நேற்று ஆரம்பமாகின.

இது தொடர்பான நிகழ்வில்  கலந்துகொண்ட பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹர்ச டி சில்வா

இலங்கைக்கு எதிராக மற்றொரு யுத்தக் குற்றச்சாட்டு பிரேரணையொன்று ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுவது குறித்து ஊடகவியாளர்னளின் கேள்விக்கும் பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அங்கு பதிலளித்தார்.

அவ்வாறு எந்த ஒரு பிரேரணையும் சமர்ப்பிக்கப்படவோ அதனை பின்போடவோ இலங்கை முயற்சி மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்த  பிரதி அமைச்சர் ‘இவை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இலங்கைக்குக்கு எதிராக சர்வதேச சமூகம் எந்த பிரேரணையையும் கொண்டுவர முயலவில்லை.மார்ச் மாத அமர்வில் இலங்கைக்கு பாதகமான எந்த விடயமும் இடம்பெறாது.அதனை உறுதியாக கூற முடியும்’ என்று கூறினார்.

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட இருக்கும் பிரேரணையை பின்போடுவது குறித்து பேசுவதற்காக அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த அமெரிக்கா சென்றுள்ளதாகவும் அவர் நேற்று அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளை சந்திக்க இருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்தி குறித்த பதிலளிக்கையில் இந்த விடயம் தொடர்பில் அமெரிக்காவுடன் பேசுவதற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தான் அங்கு செல்ல வேண்டும். இதில் உண்மையில்லை என்று  பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹர்ச டி சில்வா சுட்டிக்காட்டினார்.

பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:

மார்ச் மாத முதல்வாரத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவா மனித உரிமை அமர்வில் பங்கேற்று கடந்த காலத்தில் இலங்கையில் மேற்கொண்ட விடயங்கள் தொடர்பான முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுவார்.

ஜெனீவாவின் கடந்த அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அதிகமானவற்றை இலங்கை நிறைவேற்றியுள்ளது.நல்லிணக்கத்தை ஏற்படுத்த இதயசுத்தியுடன் சமகால அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் முழு ஆதரவை வழங்கி வருகிறது. இதனால் சர்வதேச மட்டத்தில் நற்பெயர் கிடைத்துள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக வேறு பிரேரணைகள் கொண்டுவரப்படுமா என்று நம்ப முடியாது என்றார்.

Related posts

சீரற்ற காலநிலை காரணமாக போட்டி ஒத்திவைப்பு

Mohamed Dilsad

138th Battle of the Blues; S. Thomas’ begin second day with steady start

Mohamed Dilsad

1000 திரையரங்குகளில் பரத்தின் பொட்டு..

Mohamed Dilsad

Leave a Comment