Trending News

பாதசாரிகள் மீது டிரக் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

(UTV|CANADA)-கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் பாதசாரிகள் மீது டிரக் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் நேற்று டிரக் ஒன்று பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.
அந்த டிரக்கை ஓட்டியவர் அந்த இடத்தில் இருந்து டிரக் உடன் தப்பியோடினார். அவரை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர். இந்த விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக டொரோண்டோ போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ஜனாதிபதி வேட்பாளர்; பாராளுமன்றத்தில் கருஜயசூரிய

Mohamed Dilsad

எதிர்ப்பு பேரணிக்கு தயாராக இருந்த பஸ் மீது தாக்குதல்

Mohamed Dilsad

Even Weerawansa Forgets To Hoist Black Flag At His House

Mohamed Dilsad

Leave a Comment