Trending News

பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர் முறை தொடர்ந்தும் அமுல்

(UTV|COLOMBO)-பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர் முறை தொடர்ந்தும் அமுலாகும் என்று கல்வியமைச்சர் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி பொதுச் செயலாளரும் கல்வியமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மாற்றம் பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவும் இன்று கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டத்தில் நடைபெறும் ஐப்பான் எக்ஸ்போ 2018 என்ற சமூக கலாசார கண்காட்சியில் கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார்.

இன்ற நடைபெற்ற இந்த நிகழ்வில் எதிர்காலத்தில் பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களின் பெறுமதியை அதிகரிப்பது பற்றியும் கவனம் செலுத்தப்படுகிறது. புத்தக விநியோகத்தில் தரம் பத்து, தரம் 11 ஆகிய வகுப்புக்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதிய புத்தகங்களை வழங்குமாறு கல்வியமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

 

ஆசிரியைகள் பேறுகால விடுமுறையில் செல்வதால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் கல்வியமைச்சர் பேசினார். வருடாந்தம் சராசரியாக பத்தாயிரம் ஆசிரியைகள் பேறுகால விடுமுறைகள் உள்ளிட்ட விடுப்புக்களில் செல்கிறார்கள். இந்த சமயத்தில் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க கல்வி வலய மட்டங்களில் ஆசிரியர் குழாம்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கல்வியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் அறுவர் கைது

Mohamed Dilsad

அமைச்சர் கபீர் ஹாசிம் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

Mohamed Dilsad

Johnston’s Lawyers filed leave to appeal request in SC

Mohamed Dilsad

Leave a Comment