Trending News

க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். அடுத்த மாதம் 15 ஆம் திகதி வரை இதற்காக விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிட்டார்.

பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாத பாடசாலைகள் பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சை கிளைக்கு அறிவிக்க வேண்டும்.

தனியார் விண்ணப்பதாரிகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவம் இன்றைய பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது.

பாடசாலையை விட்டு விலகி உள்ளவர்கள் மாத்திரமே தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக விண்ண்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவராக இருந்துகொண்டு தனிப்பட்ட முறையில் விண்ணப்பிப்பது சட்ட விரோத செயலாகும். இந்த விடயம் தெரியவந்தால், அவர்கள் பரீட்சை தடைக்கு உள்ளாக நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Cooler weather helps crews fight Southern California fire

Mohamed Dilsad

ஸ்ரீ.சு.கட்சி – ஸ்ரீ.பொ.முன்னணி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

Mohamed Dilsad

15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு

Mohamed Dilsad

Leave a Comment