Trending News

சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

(UTV|COLOMBO)-பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ தோட்ட பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் நேற்று (25) புதன்கிழமை இரவு 11மணி அளவில் பொகவந்தலாவ பொலிஸாரினால் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யபட்ட சந்தேகநபர்கள் பலாங்கொட பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு சில உபகரணங்களை மீட்டுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது .

கைது செய்யபட்ட சந்தேக நபர்கள் இன்று (26) வியாழக்கிழமை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தபட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Hizbullah’s parliamentary seat replaced by Shantha Bandara

Mohamed Dilsad

Rs. 150 million allocated for relief measures

Mohamed Dilsad

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக நாட்டை நெருக்கடிக்குள் தள்ளுவது முறையல்ல

Mohamed Dilsad

Leave a Comment