Trending News

ரஷ்ய டாவோஸ் இல் பங்கேற்க இலங்கைக்கு மீண்டும் அழைப்பு!

(UTV|COLOMBO)-2018 ஆம் ஆண்டுக்கான புனித பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார பேரவைக்கு (St.Petersburg International Economic Forum (SPIEF)) இலங்கையை உத்தியோகபூர்வமாக அழைக்கின்றோம். எமது இந்த அழைப்பு ரஷ்ய குடியரசின் பிரதி பிரதமர் வால்டிமிரோவிச் ட்வோர்கோவிச் (Vladimirovich Dvorkovich) இனால் நேரடியாக விடுக்கப்பட்டுள்ளது என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம், இலங்கைக்கான ரஷ்ய குடியரசின் தூதுவர் யூரிமேட்டரைய் (Yuri Materiy) தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விசேட அழைப்பின் பேரில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் அலுவலகத்திற்கு நேற்று (25) வருகை தந்திருந்த போதே, ரஷ்யத் தூதுவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

ரஷ்யாவின் டாவோஸ் (Davos) என அழைக்கப்படும் “புனித பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார பேரவை” உலகெங்கிலும் மிக உயர்ந்த மட்டத்திலான அரசாங்கப் பிரமுகர்களை இலக்காகக் கொண்ட ஒரு பெரிய வருடாந்த மாநாடு ஆகும். இது பெரும்பாலும் உயர்மட்டப் போட்டியாளர்களை ஈர்க்கிறது. கடந்த ஆண்டும் ரஷ்ய குடியரசின் பிரதி பிரதமரும், புனித பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார பேரவையும் இலங்கைக்கு அழைப்பு விடுத்திருந்தன.

புனித பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார பேரவையில் கடந்த ஆண்டு 143 நாடுகள், 14000 பார்வையாளர்கள், 1100 நிறுவனங்கள் மற்றும் ரஷ்யாவிலிருந்து 700 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். அத்துடன் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம், பெற்றோலியம் ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் (ஒபெக்) பொதுச் செயலாளர், இந்தியா, காபோன், மொங்கோலியா மற்றும் டொமினிக்கா ஆகிய நாடுகளின் பிரதமர்கள் எக்ஸ்போ பங்கேற்பாளர்களாக இருந்தனர்.

வணிக சமூகத்தின் பிரதிநிதிகளுக்காக முக்கிய பொருளாதார பிரச்சினைகளை இனங்காணுவதற்கும், விவாதிக்கவும் இந்தப் பேரவை ஒரு முன்னணி உலகளாவிய தளமாக மாறியுள்ளது. இது ரஷ்ய குடியரசுத் தலைவரின் ஆதரவுடன் நடைபெற்று வரும் ஒரு நிகழ்வாகும். கடந்த வருடமும் எமது நாட்டுப் பிரதி பிரதமர், இந்தப் பேரவையில் பங்கேற்க இலங்கைக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த ஆண்டின் புனித பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார பேரவை, முதலீட்டு மற்றும் ஏற்றுமதிக்கான வர்த்தக கண்காட்சியோடு, ஏனைய மற்ற நிகழ்ச்சிகளையும் கொண்டிருக்கும் என ரஷ்ய தூதுவர் தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாட் இங்கு கருத்து தெரிவிக்கையில்:

2018 ஆம் ஆண்டுக்கான புனித பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார பேரவைக்கு, இலங்கைக்கு விசேட அழைப்பு விடுத்தமைக்கு நாங்கள் நன்றியுணர்வுடன் இருக்கின்றோம். இலங்கையின் பங்களிப்பின் ஊடாக உலகளாவிய சந்தைகளுக்கு அதன் தயாரிப்புக்களை வெளிப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த சர்வதேச பொருளாதார பேரவையில் நாங்கள் பங்குபெறுவது குறித்து, சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம மற்றும் வர்த்தகத் திணைக்கள பிரதிநிதிகளுடன்  கலந்துரையாடுவோம். புனித பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதாரப் பேரவையானது ரஷ்யாவின் புதிய சந்தைகளுக்கு, நமது ஏற்றுமதிகளை அதிகரிக்க உதவுகிறது.

வர்த்தகத் திணைக்களத்தின் தகவலின் படி, இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான வர்த்தக சமநிலையானது, இலங்கைக்கு சாதகமாகவே இருந்தது. 2016 ஆம் ஆண்டில் இருந்து 182 மில்லியன் அமெரிக்க டொலர்களாக ஏற்றுமதிகள் அதிகரிக்கப்பட்டு வந்த ரஷ்யாவுக்கு, கடந்த ஆண்டு 210 மில்லியன் அமெரிக்க டொலர்களாக 15% சத வீதத்தால் அதிகரித்துள்ளது. ரஷ்யாவுக்கு கடந்த ஆண்டு இலங்கை தேயிலை ஏற்றுமதி 83% சதவீதமாக இருந்தது. ஆடை, நூல், நார் மற்றும் டயர்கள் ஆகியவை ரஷ்யாவுக்கான முக்கிய ஏற்றுமதிகளாக இருந்தன என அமைச்சர் பதியுதீன் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது இருதரப்பு வர்த்தக மற்றும் வர்த்தக ஒத்துழைப்பின் ஏனைய அம்சங்களையும் அமைச்சரும், தூதுவர் யூரிமேட்டரைய்யும் கலந்தாலோசித்து, பல ஆலோசனைகளினை பரிமாறிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வருட இறுதியில் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகரிக்கும்

Mohamed Dilsad

Road to Pettah closed off due to JVP protest

Mohamed Dilsad

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர்களை இலங்கைக்கு அழைப்பு

Mohamed Dilsad

Leave a Comment