Trending News

பிரபல பாலிவுட் நடிகர் படப்பிடிப்பில் குண்டு வெடிப்பு

(UTV|COLOMBO)-பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார். இவர் தமிழில் ரஜினிக்கு வில்லனாக ‘2.O’ படத்தில் நடித்துள்ளார். சங்கர் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இவர் தற்போது ‘கேசரி’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புனே அருகில் உள்ள சதாரா மலைப்பிரதேசத்தில் உள்ள புத்ருக் கிராமத்தில் நடந்தது. படத்தின் கதாநாயகன் அக்‌ஷய் குமார் உட்பட படக்குழுவினர் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.
அப்போது திடீரென அங்கு தீப்பிடித்தது, படத்தின் சண்டை காட்சியின் போது வெடித்த குண்டு காரணமாக தீ பரவியதாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பில் பல லட்சம் ரூபாய் செலவில் போட்டிருந்த பிரம்மாண்டமான செட் முற்றிலும் கருகியது.
வேகமாகப் பரவிய தீயை பல மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் அணைத்தனர். இந்த விபத்தில் படக்குழுவினர் காயமின்றி தப்பியதாக தெரியவந்துள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Dengue Prevention successfully conducted in Colombo regional schools

Mohamed Dilsad

“OPTIMISTIC OF A PROMPT RESOLUTION”

Mohamed Dilsad

Seven Sri Lankan fishermen detained by ICG

Mohamed Dilsad

Leave a Comment