Trending News

வெசாக் வலயம் இன்றுடன் நிறைவு

(UTV|COLOMBO)-கொழும்பு 2 பிறேபூறூக் பிளேஸில் அமைந்துள்ள சிரச – யூனியன் அஷ்யூரன்ஸ் வெசாக் வலயம் இன்றுடன் நிறைவடைகின்றது.

மிகிந்தலை ரஜமகா விகாரையிலிருந்து கொண்டு வரப்பட்ட புத்த பெருமானின் புனித சின்னங்கள் மற்றும் மகிந்த தேரரின் புனித சின்னங்களை வழிபடுவதற்கும் சிரச யூனியன் அஷூரன்ஸ் வெசாக் வலயத்தில் மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

மருதானை அக்ரஷாவக்க விகாரையிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள புத்த பெருமானின் சீடர்களான சரியுத் முகலன் ஆகியோரின் புனித சின்னங்களும் வெசாக் வலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

19 ஆம் நூற்றாண்டில் தாய்லாந்தில் சூலாலங்கார அரசினால் காலி ஶ்ரீ பரமானந்த ரஜ மகாவிகாரைக்கு வழங்கப்பட்ட புனித சின்னங்களும் சிரச வெசாக் வலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெசாக் வலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள புத்த பெருமானின் புனித சின்னங்களை வழிபடுவதற்காக பெருந்திரளான மக்கள் வருகை தருகின்றனர்.

சிரச வெசாக் வலயத்தில் இம்முறையும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள பல கலையம்சங்கள் அடங்கிய பெரஹரா இன்றைய தினமும் இடம்பெறவுள்ளது.

வொசக் வலயத்திற்கு வருகை தரும் பக்தர்களின் நலன்கருதி அன்னதான பந்தலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

President appeals railway employees to call off strike

Mohamed Dilsad

ஓய்வு பெற தீர்மானித்துள்ள அண்டி மரே

Mohamed Dilsad

பாராளுமன்றம் இன்று(27) கூடுகிறது

Mohamed Dilsad

Leave a Comment