Trending News

இரு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தந்தை செய்த காரியம்

(UTV|COLOMBO)-இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு தந்தையும் விஷம் அருந்திய சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது.

தந்தையும் 3 பிள்ளைகளும் யாழ்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் பற்றி தெரிய வருவதாவது,

37 வயதுடைய தந்தை நேற்றிரவு தனது பிள்ளைகளான 10 வயது மகனுக்கும் 7 வயது மகளுக்கும் உணவில் கிருமிநாசியைக் கலந்து கொடுத்து தானும் உட்கொண்டுள்ளார்.

இதனை, அயலிலுள்ள உறவினர்கள் அறிந்து மூவரையும் மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அங்கிருந்து ஒவ்வொருவராக தனித் தனி அம்பியூலன்சில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு தந்தை மற்றும் பிள்ளைகள் இருவருக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது.

தற்போது அவர்கள் மூவரினதும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இன்று காலை (1) மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Royal Park murder convict prevented from travelling overseas

Mohamed Dilsad

Barcelona beat Sevilla 2-1 to win Spanish Super Cup in Morocco

Mohamed Dilsad

ICC announces 15-day amnesty to report corrupt approaches

Mohamed Dilsad

Leave a Comment