Trending News

மே மாதம் 7 ஆம் திகதி அரச மற்றும் வங்கி விடுமுறை தினம்

(UTV|COLOMBO)-2018 ஆம் ஆண்டு மேமாதம் 1 ஆம் திகதி இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ள அரச மற்றும் வங்கி விடுமுறை தினம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக 2018 மேதினத்தை கொண்டாடுவதற்காக 2018 மே மாதம் 7 ஆம் திகதி திங்கட்கிழமை அரச வங்கி விடுமுறை தினமாகும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

தேசிய வெசாக் வாரம் 2018 ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி முதல் 2018 மேமாதம் 2ஆம் திகதி வரை இடம்பெறுவதால் உலகத்தொழிலாளர் தினம் 2018 மே மாதம் 1ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. அன்றைய தினம் இடம்பெற்றுள்ள அரச மற்றும் வங்கி விடுமுறைதினம் இரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக 2018 மே தினத்தைகொண்டாடவதற்காக 2018 மே மாதம் 7 ஆம் திகதி திங்கட்கிழமை அரச மற்றும் வங்கி விடுமுறையாக வேண்டும் .

1971ஆம் ஆண்டு இலக்கம் 29இன் கீழான விடுமுறை சட்டத்தின் 10 (1)(ஆ) சரத்து மற்றும் 11 (1)(ஆ) சரத்திற்கு அமைவாக தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபயவர்த்தனவினால் 2018 ஏப்ரல் 6ஆம் திகதி வர்த்தமானி மூலம் இதற்கான அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த பிரகடனத்திற்கு அமைவாக உலக தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதற்கு 2018 மேமாதம் 1 அதாவது இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றிருந்த அரச மற்றும் வங்கி விடுமுறை இரத்தாகின்றது. இதற்கு பதிலாக 2018 ஆம் ஆண்டு மே தினத்தை கொண்டாடுவதற்காக 2018 மே மாதம் 7ஆம் திகதி திங்கட்கிழமை அரச மற்றும் வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தொழில்கொள்வோரும் தமக்கு உட்பட்ட ஊழியர்களுக்கு தொழிலாளர்களுக்கும் 1971 இலக்கம் 29 என்ற விடுமுறை சட்டத்தின் கீழ் உள்ள அரசாங்கத்தின் விடுமுறை நாளுக்கான சம்பளத்துடன் விடுமுறை தினம் என்ற ரீதியில் வழங்கவேண்டும்.

மே தினம் இதில் ஒரு விடுமுறைதினமாகும். அத்தோடு இதனால் மேலே குறிப்பிடப்பட்ட மாற்றம் வர்த்தக விடுமுறைக்கும் பொருத்தமானதாகும்.

சட்டத்தரணி
சுதர்ஷன குணவர்த்தன
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்
2018 – 04 – 19

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இளம் ஜோடி செய்த காரியம்-காவற்துறையினரால் கைது

Mohamed Dilsad

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – இறுதி அறிக்கை தயார்

Mohamed Dilsad

Leave of all Police Personnel cancelled

Mohamed Dilsad

Leave a Comment