Trending News

காலநிலை மாற்றத்தினால் மக்கள் அவதானமாக செயற்படுவது அவசியம்

(UTV|COLOMBO)-நாட்டின் தென்கிழக்கு பிரதேசத்தில் ஆழமான கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சி காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் மேற்கு , சப்ரகமுவ ,தெற்கு ,மத்திய , வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் வவுனியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேற்கு மற்றும் தெற்கு கடற்கரையோரபகுதிகளில் காலை வேளையில் மழைபெய்யக்கூடும்.சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில்  காலைவேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும்.

கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20 – 30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகமானது சடுதியாக (மணித்தியாலத்துக்கு 70-80கிலோ மீற்றர் வரை) அதிகரித்து வீசக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக காற்று வீசக்கூடும். இடிமின்னலின்போது பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Staples soars 11 percent amid report of buyout talks

Mohamed Dilsad

Special High Court releases ‘Ali Roshan’; Says no jurisdiction to hear the case

Mohamed Dilsad

News Hour | 06.30 AM | 28.11.2017

Mohamed Dilsad

Leave a Comment