Trending News

LIVE UPDATE: அமைச்சரவை மாற்றங்களின் படி புதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம் இதோ!

(UTV|COLOMBO)-புதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் படி பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

அதன்படி பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம் வருமாறு,

இராஜாங்க அமைச்சர்கள்

பாலித ரங்கே பண்டார: நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர்.

திலீப் வெதரச்சி: கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர்

எம்.எல.ஏ.எம். ஹிஸ்புல்லா: நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

மொஹான் லால் குரேரு: உயர் கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

சம்பிக பிரேமதாச: தோட்டத் தொழிற்துறை இராஜாங்க அமைச்சர்

லக்ஷ்மன் செனவிரட்ன: பொது நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு இராஜாங்க அமைச்சர்

ஸ்ரீயானி விஜேவிக்கிராம: விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர்

வீரகுமார திசாநாயக்க: மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

பிரதியமைச்சர்கள் விபரம்

அமீர் அலி: மீன்பிடி மற்றும் நீர்வள முகாமைத்துவம் மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சர்

துனேஷ் கன்காந்த: காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு பிரதி அமைச்சர்

ரஞ்சன் ராமநாயக்க: சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர்

கருணாரத்ன பரணவிதான: விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி மற்றும் மலைநாட்டு பாரம்பரிய பிரதி அமைச்சர்

சாரதி துஷ்மந்த: நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு பிரதி அமைச்சர்

பாலித குமார தெவவரப்பெரும: நிலையான அபிவிருத்தி, வனவிலங்கு மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சர்

மானுஷ நாணயக்கார: தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்

முத்து சிவிங்கிங்கம்: உள்துறை மற்றும் வடமேல் அபிவிருத்தி பிரதி அமைச்சர்

அலி ஸாஹிர் மௌலானா: தேசிய கலந்துரையாடல், நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர்

எச்.எம்.எம். ஹரீஸ்: பொது நிர்வாகம் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

අගමැතිගේ ප්‍රකාශයෙන් ව්‍යවස්ථාදායකය සහ අධිකරණය අතර ගැටුමක් ඇතිවේද…?

Editor O

UN expert to visit SL to assess rights to freedom of peaceful assembly

Mohamed Dilsad

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 762 முறைப்பாடுகள் பதிவு

Mohamed Dilsad

Leave a Comment