Trending News

காலநிலையில் திடீர் மாற்றம்

(UTV|COLOMBO)-இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்ப காலநிலை நிலவும் என்ற வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகளிலும் வட மேல், ஊவா மாகாணங்களிலும், மாத்தளை அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் கடும் வெப்ப காலநிலை காணப்படும் என்றும் இதனால் இதுதொடர்பில் கூடுதலான கவம் செலுத்துமாறு திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

பொலன்னறுவை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் வெப்பநிலை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான அளவில் நீரை பருகவும். முடியுமான வரை நிழல் உள்ள இடங்களில் ஓய்வெடுப்பதுடன் .வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்து அவசியம்.

 

சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்லக்கூடாது என்றும் வெட்ட வெளியில்,அதிகளவில் களைப்படையும் செயற்பாடுகளை குறைத்துக்கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

 

இருப்பினும் நேற்றைதினம் நாட்டின்பெரும்பாலன பிரதேசங்களில் மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவிப்பு?

Mohamed Dilsad

400 ஆண்டுகள் பழமையான போன்சாய் மரம் திருட்டு

Mohamed Dilsad

பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment