Trending News

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கை

(UTV|COLOMBO)-ஜனாதிபதி அலுவலகத்தின் உயரதிகாரி ஒருவரும் வேறு அரச நிறுவனமொன்றின் தலைவரும் இலஞ்ச குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளமை தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:

ஜனாதிபதி அலுவலகத்தின் உயரதிகாரி ஒருவரும் வேறு அரச நிறுவனமொன்றின் தலைவரும் இலஞ்ச குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.

 

இச்சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளின் சேவையை உடனடியாக இடைநிறுத்துமாறு கட்டளையிட்டுள்ள ஜனாதிபதி  குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எந்தவித அழுத்தங்களுமின்றி சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் உரிய அதிகாரிகளுக்கு பணித்துள்ளர். ஊழல் மோசடிக்க்கு எதிரான அரசாங்கத்தின் தீர்க்கமான கொள்கையினை நடைமுறைப்படுத்தல் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்க வேண்டியதன் முக்கியத்துவம் இதனூடாக உறுதியாகின்றது. சட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பினை வகிக்கும் அரச அதிகாரிகளுக்கு தமது கடமைகளை உரியவாறு நிறைவேற்றுவதற்காக தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள சுயாதீனமானஇ பக்கச்சார்பற்ற பின்னணி தொடர்பாக தாம் மகிழ்சியடைவதாக கெளரவ ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தள்ளார்.

 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
03.05.2018

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

உலகின் மிகநீண்ட கடல்பாலம் நாளை திறப்பு

Mohamed Dilsad

Pentagon report to Congress notes China’s involvement in Sri Lanka [REPORT]

Mohamed Dilsad

Police curfew in Chilaw until 4.00 AM tomorrow [UPDATE]

Mohamed Dilsad

Leave a Comment