Trending News

நிவாட் கப்ராலின் வங்கி கணக்குகளை பரிசீலனை செய்ய நீதவான்அனுமதி

(UTV|COLOMBO)-மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் வங்கி கணக்குகளை பரிசீலனை செய்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் வங்கி கணக்குகளை பரிசோதனை செய்ய காவல் துறை நிதி மோசடி பிரிவு அனுமதி கோரியிருந்தது.

இந்நிலையில், குறித்த கோரிக்கைக்கு இணங்க அவரின் வங்கி கணக்குகளை பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கையில் பொது நலவாய நாடுகளுக்கான விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்காகவும் அந்த நாடுகளின் இணக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவும் அரச பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் இதற்கு முன்னர் விசாரணைகள் நடத்தப்பட்டன.

இதன் போது, சீ.டபிள்யு.ஐp. ஹம்பாந்தோட்ட பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்திற்கு கிடைத்த 690 மில்லியன் ரூபா பணத்தை செலவிடும் போது அதில் மோசடிகள் நடந்துள்ளதாக விசாரணைகளின் வாயிலாக கண்டறியப்பட்டுள்ளன.அத்துடன், குறித்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்வதற்காக பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு வழங்கப்பட்ட 25 மில்லியனுக்கு அதிகமான பணம் நிறுவனத்தின் கணக்கில் வைப்புச் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

எனினும் அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் 245 ரூபா மாத்திரமே இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிறுவனத்தில் அஜித் நிவாட் கப்ரல், மகிந்தானந்த அளுத்கமகே, நாமல் ராஜபக்ச ஆகியோர் இணை தலைவர்களாகவும் உதய செனவிரத்ன, அனில் நளின் ஆட்டிகல, நாலக கொடஹேவா, பியந்த குமார ரத்நாயக்க, ராணி ஜயமஹா ஆகியோர் பணிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தனர்.

கடந்த 2006ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையில் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுனராக கடமையாற்றியிருந்த போது இடம்பெற்றதாகக் கூறப்படும் அரச சொத்து துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பிலேயே தற்போது விசாரணைகள் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Showers expected in several areas today

Mohamed Dilsad

President receives warm welcome in Moscow

Mohamed Dilsad

Bolivian Senator declares herself President

Mohamed Dilsad

Leave a Comment