Trending News

02 கோடிக்கும் அதிக பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஒரு தொகை தங்கத்தை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து வருகை தந்த சந்தேகநபரின் பயப் பொதியில் இருந்து இந்த தங்க பிஸ்கட்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிடம் இருந்து 02 கிலோவும் 100 கிராம் நிறையுடைய 20 தங்க பிஸ்கட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

46 வயதுடைய கண்டி, தெய்யன்வல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் விமான நிலையப் பொலிஸாரால் மேலதிக விசாரணைகளுக்காக சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Muslim Cultural Center opened

Mohamed Dilsad

වන සතුන්ගෙන් වන වගාහානි වලට විසඳුම් සොයන්න කමිටුවක් පත් කළා – නියෝජ්‍ය ඇමති නාමල්

Editor O

Bangladesh confident of Coach Hathurusingha’s stay

Mohamed Dilsad

Leave a Comment