Trending News

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை கடல் கொந்தளிப்பு

(UTV|COLOMBO)-மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்டுவதுடன் அலைகளின் தாக்கமும் அதிகமாக காணப்படும்.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வளிமண்டலவியல் வெளியிட்டுள்ள இறிக்கை பின்வருமாறு 
2018 மே 15ஆம் திகதி வரை மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் 2.0 – 2.5மீ உயரம் வரை மேலெழும் அலைகள் காரணமாக (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) குறித்து கடல்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்டுவதுடன் அலைகளின் தாக்கமும் அதிகமாக காணப்படும்.
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.
ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.
புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து   வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20 – 30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகமானது சடுதியாக (மணித்தியாலத்துக்கு 70-80கிலோ மீற்றர் வரை) அதிகரித்து வீசக்கூடும்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இயந்திரத்தினை திருத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் அதில் சிக்குண்டு பலி

Mohamed Dilsad

Ethiopia’s Abiy Ahmed wins Nobel Peace Prize

Mohamed Dilsad

Lieutenant Colonel Erantha Peiris remanded till Sept. 28

Mohamed Dilsad

Leave a Comment