Trending News

மாகாணசபைகளுக்கு பொருளாதாரத் திட்டங்களை முன்னெடுக்க அதிகாரம் உண்டு

(UDHAYAM, COLOMBO) – 13 ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாணசபைகளுக்கு பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பில் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. திவிநெகும சட்டத்தின் ஊடாக இவை முன்னைய அரசாங்கத்தினால் பரிக்கப்பட்டன.

திவிநெகும திருத்தச் சட்டமூலம் தேசிய ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபைச் சட்டம் ஆகியவற்றின் கீழான இரண்டு ஏற்பாடுகளை  நேற்று பாராளுமன்றம் அங்கீகரித்தது.

இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே

பாராளுமன்ற உறுப்பினரான ஜயம்பதி விக்ரமரட்ன இவ்வாறு தெரிவித்தார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்தும், மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்குவது குறித்தும் தற்பொழுது கலந்துலையாடப்படுகின்றன. ஆனால், கடந்த ஆட்சியின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பிரயோகித்து மாகாணசபைகள் பலவீனப்படுத்தப்பட்டன என்றும் அவர் குற்றஞ் சாட்டினார்.

நாட்டின் நலனுக்காக அரசாங்கத்தின் கரத்தை பலப்படுத்துகின்றோம் என்று தெரிவித்து எதிரணியிலிருந்து உறுப்பினர்களை முன்னைய ஆட்சியானர்கள் தம்முடன் இணைத்துக்கொண்டனர்.அதன் ஊடாக மாகாணசபைகளின் அதிகாரங்களையே அரசாங்கத்தின் கீழ் கொண்டுவந்தனர். வாழ்வின் எழுச்சி சட்டமூலத்தின் ஊடாக பறிக்கப்பட்ட மாகாணசபைகளின் அதிகாரங்கள் மீள வழங்கப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினரான ஜயம்பதி விக்ரமரட்ன மேலும் தெரிவித்தார்.

Related posts

A deceive meeting on death penalty today

Mohamed Dilsad

சஜித் ரணில் சந்திப்பில் நடந்தது என்ன?

Mohamed Dilsad

இலங்கை வரும் தாய்லாந்து பிரதமர்

Mohamed Dilsad

Leave a Comment