Trending News

நாடு முழுவதும் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாடு முழுவதும் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் குறிப்பாக பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் காலைவேளையில் மழை பெய்யும்.

சில இடங்களில், குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சுமார் 100மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

தெற்கு மற்றும் தென்மேற்கு கடற்பரப்புகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும்.

 

இடியுடன் கூடிய மழையின்போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

SLTB bus fares to be reduced by 2%

Mohamed Dilsad

ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

Mohamed Dilsad

Gazette on maintaining public order, issued

Mohamed Dilsad

Leave a Comment