Trending News

திரைப்படத்துறைக்காக பணியாற்றிய கலைஞர்களுக்கு ஓய்வூதியம்

(UTV|COLOMBO)-தேசிய சினிமாத்துறையை ஊக்குவிப்பதற்காக காலத்தையும் நேரத்தையும் செலவிட்ட கலைஞர்களுக்கான மாதாந்த ஓய்வூதிய கொடுப்பனவு மேலும் சில கலைஞர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

தற்பொழுது வாழும் கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் திரைப்படக்கூட்டுத்தாபனம் வழங்கும் இந்த ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கல் தொடர்பான வைபவம் தேசிய திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் தரங்கனி சினிமா மண்டபத்தில் நாளை மாலை நடைபெறவுள்ளது.

 

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராகவும் , அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

 

கலைஞர்களுக்கு இந்த கொடுப்பனவை வழங்கும் திட்டம் முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்தனவின் நிர்வாகக் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.1987 ஆம் ஆண்டு 500 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டதுடன் பின்னர் அத்தொகை 2000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. 1998ஆம் ஆண்டுக்குப்பின்னர் இத்தொகை அதிகரிக்கப்படவில்லை.

 

அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் தொலைநோக்கிற்கு அமைவாக அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவிற்கான உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுது இத்தொகை 5000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இக்கொடுப்பனவு 103 கலைஞர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி வரையில் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களுக்கு அமைவாக 60 வயதைப்பூர்த்தி செய்துள்ள கலைஞர்கள் இதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய திரைப்படக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களுக்கான கொடுப்பனது 2ஆம் கட்ட பணியின் கீழ் வழங்கப்படவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Australian Government extends further assistance in flood relief operations

Mohamed Dilsad

சாய்ந்தமருது கபீரின் மறைவுக்கு, அமைச்சர் ரிசாத் பதியுதீன் அனுதாபம்

Mohamed Dilsad

Public urged to take protective measures during windy weather

Mohamed Dilsad

Leave a Comment