Trending News

தொடங்வல பிரதேசத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு தொடர்பில் ஆய்வு

(UTV|KANDY)-கண்டி அனிவத்தை சுரங்கப்பாதையில் தொடங்வல பிரதேசத்திற்கு அண்மையில் ஏற்பட்ட மண்சரிவு தொடர்பான ஆய்வு இன்றும் தொடர்வதாக கண்டி மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தின் விசேட ஆய்வியலாளர்கள் இதற்கென சமூகமளிக்கவுள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக ரணவீர தெரிவித்தார்.

நேற்று காலை மண்சரிவுக்குட்பட்ட கண்டி அனிவத்தை சுரங்கத்தின் தொடங்வல பிரதேசத்திற்கு அண்மித்த பகுதி தொடர்ந்தும் அபாயமிகு வலயமாக காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் குறித்த பகுதி போக்குவரத்திற்காக மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவும் அபாய நிலைமை காரணமாக வேறு வீதிகளை பாவிக்குமாறு சாரதிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

England call up Pope, Woakes to replace Malan, Stokes for India test

Mohamed Dilsad

தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

Mohamed Dilsad

Three sentenced to death over murder

Mohamed Dilsad

Leave a Comment