Trending News

சைட்டம் மாணவர்கள் தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானம்

(UTV|COLOMBO)-சைட்டம் கல்லூரியில் கற்கும் 980 மாணவர்களையும் கொத்தலாவெல பாதுகாப்பு கல்லூரியின் மருத்துவ பீடத்தில் உட்சேர்ப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

சைட்டம் கல்லூரியில் கற்கும் 980 மாணவர்களையும் கொத்தலாவெல பாதுகாப்பு கல்லூரியின் மருத்துவ பீடத்தில் உட்சேர்ப்பது சம்பந்தமான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் உயர் கல்வியமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ ஆகியோர் இணைந்து தாக்கல் செய்தனர்.

அந்த மாணவர்களின் தகுதியை மதிப்பீடு செய்து அவர்களின் தகுதிக்கமைய கொத்தலாவெல பாதுகாப்பு கல்லூரியின் மருத்துவ பீடத்தில் இணைத்துக் கொள்வதற்காக இந்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

எவ்வாறாயினும் இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கு அனுமதி கிடைத்ததாக உயர் கல்வி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Leaders gather for G20 Buenos Aires talks amid rising tensions

Mohamed Dilsad

கணவர் தற்கொலைக்கு பின் மனம் திறந்த நடிகை மைனா நந்தினி!!

Mohamed Dilsad

பாராளுமன்ற குழப்ப நிலை தொடர்பான அறிக்கை பாராளுமன்றுக்கு

Mohamed Dilsad

Leave a Comment