Trending News

நின்று கொண்டிருந்த விமானத்துடன் பயணிகள் விமானம் மோதியதால் பரபரப்பு -(VIDEO)

(UTV|TURKEY)-துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தென்கொரியாவின் இன்சியான் நகருக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் 222 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகள் இருந்தனர்.

அந்த விமானம் ஓடுதளத்தில் புறப்பட தயாராக சென்று கொண்டிருந்தபோது, ஓடுதளத்தை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துருக்கியை சேர்ந்த மற்றொரு விமானத்துடன் மோதியது.
கொரிய விமானத்தின் இறக்கைகள், துருக்கி விமானத்தின் பின் பகுதி இறக்கையுடன் மோதியது. இதில் துருக்கி விமானத்தின் பின்பக்க இறக்கை சேதமடைததோடு, தீ பிடித்து எரிந்தது. இதையடுத்து உடனடியாக கொரிய விமானம் நிறுத்தப்பட்டது. உடனடியாக தியணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை.
கொரிய விமானமும் சேதமடைந்ததால் அதிலிருந்த பயணிகள் உடனடியாக இறக்கப்பட்டு, ஹோட்டலில் தங்கவைக்கபட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தில் பயணிகள் விமான ஒன்று நின்று கொண்டிருந்த மற்றொரு விமானத்தின் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

US pleased SL agreed to co-sponsor UNHRC resolution

Mohamed Dilsad

சூரத் நகரில் திடீர் தீ விபத்து-20 பேர் பலி

Mohamed Dilsad

New Cabinet of Ministers sworn in

Mohamed Dilsad

Leave a Comment