Trending News

பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாட்டைச் சூழ உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத்தின் தளம்பல்நிலை காரணமாக நாட்டின் தென் அரைப்பாகத்தில் வானம் மேகமூட்டமாக காணப்படுவதுடன் மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்குமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பெரும்பாலான மாகாணங்களில் குறிப்பாக பிற்பகல் 2.00 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் .

நாட்டின் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும்.

சில இடங்களில், குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் 100மி.மீ மழை பதிவாகக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு வரையான கடற்கரையோர பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

 

இடியுடன் கூடிய மழையின் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Wheat flour price hiked

Mohamed Dilsad

Fifty-two-year-old falls to death from ‘Sethsiripaya’

Mohamed Dilsad

இராணுவத்தினர் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு இரத்த தானம்

Mohamed Dilsad

Leave a Comment