Trending News

30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் ஒன்பது வருடங்கள்

(UTV|COLOMBO)-இந்நாட்டில் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் ஒன்பது வருடங்கள் பூர்த்தியாகின்றது.

இதனை முன்னிட்டு 9வது இராணுவ வீரர்கள் தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாடாளுமன்ற மைதானத்தில் இராணுவ வீரர்கள் நினைவுச்சின்னம் அருகே இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

அதேபோல் , நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் முகமாக இலங்கை இராணுவம் நடாத்தும் அலோக பூஜா களனி ரஜமகா விகாரையில் இடம்பெறவுள்ளது.

கடற்படை , விமானப்படை , காவற்துறை , சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பங்கேற்பில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடற்படை , விமானப்படை , காவற்துறை , சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பங்கேற்பில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் , முப்படை தளபதிகள் , காவற்துறை மா அதிபர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் போன்று உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக இராணுவத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

கடும் வாகன நெரிசல்

Mohamed Dilsad

14 Wayamba University students remanded over an assault

Mohamed Dilsad

උෂ්ණ කාලගුණය හේතුවෙන් පාසල්වලට නිර්දේශ මාලාවක්

Editor O

Leave a Comment