Trending News

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்

(UTV|COLOMBO)-தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை தீவிரம் பெறுவதால் ஏதிர்வரும் 22ஆம் திகதி தொடக்கம் அடைமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.எச்.பிரேமலால் தெரிவித்தார்.

 

இந்தக் காலப்பகுதியில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஏற்படலாமென்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்தன இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பாக மேலும் தெரிவித்ததாவது நாட்டின் மலைப்பாங்கான பிரதேசங்களில் அடை மழைபெய்யலாம். இந்தப் பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதான்துடன் செயல்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

 

மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய 10 மாவட்டங்களில் 15 ஆயிரம் குடும்பங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இந்தக் குடு;மபங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் ஊடகங்களில் அறிவிக்கப்படும் மண்சரிவு அபாய எச்சரிக்கைகளை அனுசரித்து நடவடிக்கை வேண்டுமென திரு.கருணாவர்தன கோரிக்கை விடுத்தார்.

இடர் நிலைமைகள் பற்றி இடர்காப்பு முகாமைத்துவ நிலையத்திற்கு தொலைபேசி மூலம் அறிவிக்க முடியும். அழைக்க வேண்டிய இலக்கம் 0117 என்பதாகும். இதுதவிர, 0112-136-136, 079-117-117, 0702-117-117 ஆகிய இலக்கங்களையும் தொடர்பு கொள்ள முடியும்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பேக்கரி உற்பத்திகளது விலை குறைவு

Mohamed Dilsad

Met. Department cautions naval and fishing communities

Mohamed Dilsad

Nine SSPs promoted to DIG

Mohamed Dilsad

Leave a Comment