Trending News

முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் தாயாரின் மறைவிற்கு ஜனாதிபதி இரங்கல் செய்தி

(UTV|COLOMBO)-மலையக மக்களின் விடிவுக்காக போராடியவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மருமகளான இராஜேஸ்வரி இராமநாதன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகம் தொண்டமானின் தாயார் இராஜேஸ்வரி இராமநாதன் தொண்டமானின் மறைவுச் செய்தியை அறிந்து கவலையடைகிறேன்.

மலையக மக்களின் விடிவுக்காக போராடிய அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் மருமகளான இராஜேஸ்வரி ராமநாதன் அவர்கள், தனது கணவரும் மத்திய மாகாண அமைச்சருமாக இருந்த அமரர் ராமநாதன் தொண்டமான் அவர்கள் சிறப்பாக சேவையாற்ற மிகவும் உறுதுணையாக இருந்தமையை நான் இங்கு நினைவுகூர விரும்புகிறேன். அவ்வழியிலேயே பயணிக்கும் அக்குடும்ப வாரிசுகளாகிய கௌரவ ஆறுமுகம் தொண்டமான் மற்றும் கௌரவ செந்தில் தொண்டமான் ஆகியோரும் இலங்கையின் மலையக அரசியலில் முக்கியஸ்தர்களாக செயற்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக மலையக மக்களின் அரசியல், கல்வி மற்றும் பொருளாதார விடிவுக்காகவும் பொதுவாக நம் நாட்டின் அனைத்து மக்களின் நலனுக்காகவும் பாடுபட்டு உழைத்த ஒரு அரசியல் குடும்பத்தின் முக்கியஸ்தரான அமரர் ராஜேஸ்வரி ராமநாதன் அவர்களின் இழப்பு தொண்டமான் குடும்பத்தினருக்கு மாத்திரமன்றி இலங்கை மலையக சமூகத்திற்கும் ஒரு பேரிழப்பாகும்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் கௌரவ ஆறுமுகம் தொண்டமான் அவர்களுக்கும் அவருடைய சகோதரிகளுக்கும் கௌரவ செந்தில் தொண்டமான் உள்ளிட்ட பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்ப உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்திக்கின்றேன்.

 

 

மைத்ரிபால சிறிசேன
2018 மே 17 ஆம் திகதி

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Rugby Australia appoints first female Chief Executive

Mohamed Dilsad

கடுவல மாநகரத்தை மேம்படுத்த நடவடிக்கை

Mohamed Dilsad

Sixteen SLFP Parliamentarians to meet Rajapaksa today

Mohamed Dilsad

Leave a Comment