Trending News

ஆறுகளின் நீர் மட்டம் உயர்வு மக்கள் அவதானத்துடன் இருக்குமாரு பணிப்பு

(UTV|COLOMBO)-நாட்டில் பெய்துவரும் அடை மழை காரணமாக நில்வளா, கிங், களு, களனி, அத்தனகலு ஓய மற்றும் மா ஓய ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் பின்வரும் பகுதிகளில் வசிக்கும் மக்களை மிகவும் அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

நில்வளா – மாத்தறை, கடவத் சதாரா, திஹகொட, மலிம்பட, கம்புறுபிட்டிய, அதுருலிய, அகுரஸ்ஸ, பிடபாத்தர பிரதேச செயலக பிரிவுகள்.

கிங் – பத்தேகம, போப்பே, போத்தல, வெலிவிட்டிய, திவிதுர, நாகொட, நியகம, தவலம, நெலுவ பிரதேச செயலக பிரிவுகள்.

களு – களுத்துறை, தொடம்கொட, மில்லனிய, மாதுருவல, ஹொரண, பாலிந்தநுவர, புளத்சிங்ஹல, இங்கிரிய, கிரில்ல, குருவிட்ட, எலபத்த, இரத்தினபுரி பிரதேச செயலக பிரிவுகள்.

களனி – கொழும்பு, களனி, கொலன்னாவ, பியகம, கடுவெல, ஹன்வெல்ல, தொம்பே, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட, தெரணியகலா பிரதேச செயலக பிரிவுகள்.

அத்தனகலு ஓய – நீர்கொழும்பு, ஜா-எல, கட்டான, மினுவங்கொட, கம்பஹா, அத்தனகல்ல பிரதேச செயலக பிரிவுகள்.

மா ஓய – பன்னல, திவுலப்பிட்டிய பிரதேச செயலக பிரிவுகள்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஞானசார தேரரின் கதையை கேட்டவர்களுக்கு நடந்தது என்ன?

Mohamed Dilsad

SLPP Colombo Municipal Councillor granted bail 

Mohamed Dilsad

யாருக்கும் கோரிக்கை விடுக்க முடியும் – இராணுவ தளபதி…

Mohamed Dilsad

Leave a Comment