Trending News

சீரற்ற காலநிலையால் 8 பேர் பலி – 38,040 பேர் பாதிப்பு

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 38,040 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் 8 பேர் சீரற்ற காலநிலையால் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

15 மாவட்டங்களில் சீரற்ற காலநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை களனி, களு, ஜிங், நில்வலா மற்றும் மகாவலி ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்களை அவதானத்துடன்  இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மா ஓய மற்றும் அத்தனகலு ஓயவை அண்டிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

குப்பைகளை உரிய முறையில் வகைப்படுத்தினால் சிக்கல் இல்லை

Mohamed Dilsad

மினுவாங்கொட சம்பவத்தின் சந்தேகநபர்கள் 7 பேர் பிணையில் விடுதலை

Mohamed Dilsad

SLFP Central Committee decides to expel Fowzie

Mohamed Dilsad

Leave a Comment