Trending News

வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் சதொச நிறுவனத் தலைவருக்கு அமைச்சர் ரிஷாட் பணிப்புரை

(UTV|COLOMBO)-வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேச செயலாளர் ஊடாக உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு சதொச நிறுவனத் தலைவருக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் சுமார் 38000 இற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அகதியான மக்களுக்கு உதவும் வகையிலேயே பிரதேச செயலாளருக்கூடாக உணவுப் பொருட்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை வழங்குமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதே வேளை, நாட்டிலுள்ள லங்கா சதொச  முகாமையாளர்களுக்கு தமது கிளைகளிலுள்ள பொருட்களின் இருப்புக்களை அதிகரிக்குமாறும், மேலும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள களஞ்சியசாலைகளின் கொள்ளளவுகளை விஸ்தரிக்குமாறும் சதொச நிறுவனத் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் அத்தியாவசியப் பொருட்களை தரைவழியாக கொண்டு செல்ல முடியாத பிரதேசங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினூடாக விமானம் ஊடாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உலர் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு சதொச நிறுவனத் தலைவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கை வீரர்களுக்கு 2 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ள தடை

Mohamed Dilsad

ஜனாதிபதியுடனான சந்திப்பில் சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் எடுத்த அதிரடி முடிவு

Mohamed Dilsad

Karu asks Public Servants not to execute President’s orders

Mohamed Dilsad

Leave a Comment