Trending News

வௌ்ளம் காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம்-சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

(UTV|COLOMBO)-வௌ்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் தொற்று நோய்கள் பரவுதற்கான நிலைமை காணப்படுவதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவை வழங்குவது பொருத்தமானது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் நாயகம் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

வௌ்ள அனர்த்த பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் தானியங்களை உட்கொள்வதில் அவதானமாக செயற்படுமாறும் ​பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

நுகர்வுக்கு ஒவ்வாத உணவு விநியோகிக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் நாயகம் மகேந்திர பாலசூரிய குறிப்பிடுகின்றார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Special Dengue Prevention Program on May 18 and 19

Mohamed Dilsad

SLR signs agreement with Prima Company

Mohamed Dilsad

UPDATE: GMOA token strike called off

Mohamed Dilsad

Leave a Comment