(UTV|AMERICA)-பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டமை தொடர்பிலான Cambridge Analytica நிறுவன விவகாரம் குறித்து தமது நிறுவனத்தின் பங்குமுள்ளதாக தெரிவித்து பேஸ்புக் நிறுவுனர் மார்க் சக்கர்பேக் ஐரோப்பிய சட்டவல்லுனர்கள் முன்னிலையில் மன்னிப்பு கோரியுள்ளனர்.
பேஸ்புக் பயனர்களின் தரவுகள் பாதிப்பேற்படுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பிலும் அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டமை தொடர்பிலான Cambridge Analytica விவகாரம் குறித்த விசாரணைகளுக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் மார்க் சக்கர்பர்க் நேற்று ஐரோப்பிய சட்டவல்லுனர்கள் முன்னிலையில் முன்னிலையாகியிருந்தார்.
இதற்கு முன்னர் பேஸ்புக் நிறுவுனர் மார்க் சக்கர்பர்க் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களினால் பகிரங்க விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]