Trending News

680 மில்லியன் டொலர் ஊழல்

(UTV|MALAYSIA)-மலேசியாவின் 14 வது பாராளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக 60 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து 92 வயதான மகாதிர் முகமது அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

முன்னதாக, மலேசிய அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டொலர் அளவுக்கு முறைகேடு செய்து அந்த தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் மடைமாற்றி விட்டதாக அப்போதைய பிரதமர் நஜிப் ரஜாக் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி தலைவராக இருந்த மகாதிர் முஹம்மது வலியுறுத்தி வந்தார். தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் கட்சி தலைவர் பதவியையும் நஜிப் ரசாக் ராஜினாமா செய்தார்.

அதைத் தொடர்ந்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் புரிந்து உள்ளதாக நஜிப் ரசாக் மீது எழுந்த குற்றச்சாட்டு சூடு பிடிக்கத் தொடங்கியது. அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.

அவரது வீட்டிலும், அவருக்கு சொந்தமான இடங்களிலும் பொலிஸார் அதிரடி சோதனைகள் நடத்தினர். அங்கு இருந்து பணக்கட்டுகள், நகைகள் வைத்து நிரப்பப்பட்ட ஏராளமான கைப்பைகள் சிக்கின.

இந்த நிலையில் அவர் நேற்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று அந்நாட்டின் ஊழல் தடுப்பு கமிஷன் சம்மன் அனுப்பியது.

இதைதொடர்ந்து ஊழல் தடுப்பு கமிஷனர் முஹம்மது ஷுக்ரி அப்துல் முன்னர் ஆஜரான நஜிப் ரசாக்கிடம் நேற்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு பின்னர் அலுவலகத்தின் வெளியே கூடியிருந்த செய்தியாளர்களை சந்தித்த நஜிப் ரசாக், வரும் வியாழக்கிழமை நடைபெறும் விசாரணையிலும் ஆஜராவேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், மலேசியா நாட்டில் கடந்த 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மங்கோலியா நாட்டு மாடல் அழகி கொலை வழக்கில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை தொடர்புப்படுத்தி, மறு விசாரணை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

PM to chair Indian Ocean Conference in Maldives next month

Mohamed Dilsad

துபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கிய 13 வயது சிறுவன்

Mohamed Dilsad

Remand extended for Amal, Nadeemal and others arrested in Dubai

Mohamed Dilsad

Leave a Comment