Trending News

எவன்கார்ட் நிறுவன தலைவரின் மனு பிற்போடப்பட்டது

(UTV|COLOMBO)-இரகசியப் பொலிஸாரால் தான் கைது செய்யப்படுவதை தடை செய்து உத்தரவிடுமாறு கோரி எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு ஜூன் மாதம் 08ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

அந்த மனு இன்று (23) பிரியந்த ஜயவர்தன மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது நீதிபதி முர்து பெர்ணான்டோ இந்த வழக்கை விசாரிக்க விரும்பாத காரணத்தால் மனுவை பிற்போடுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலி துறைமுகத்தில் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் சென்ற சம்பவத்தில் தன்னை கைது செய்து விளக்கமறியலில் வைப்பதற்கு இரகசியப் பொலிஸார் முயற்சிப்பதாக நிஸ்ஸங்க சேனாதிபதி தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு அமைச்சரவையின் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்திருந்ததாக நிஸ்ஸங்க சேனாதிபதி தனது மனுவில் கூறியுள்ளார்.

தனக்கு எதிராக இரகசியப் பொலிஸார் விசாரணை செய்துள்ள விதம் தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதமான முறையில் இருப்பதாகவும், இதனூடாக தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

இதன் காரணமாக தனக்கு எதிரான விசாரணை ஊடாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்றும், தன்னை கைது செய்வதற்கு தடை விதித்து உத்தரவிடுமாறும் நிஸ்ஸங்க சேனாதிபதி உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

West Indies coach Stuart Law suspended for two ODIs

Mohamed Dilsad

ජනපති රාමඤ්ඤ මහා නිකායේ මහා නායක හිමි බැහැ දැක ආශිර්වාද ලබා ගනී

Editor O

தெற்காசியாவின் மிக உயரமான கோபுரம் இன்று திறப்பு

Mohamed Dilsad

Leave a Comment