Trending News

டெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரிப்பு-தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு

(UTV|COLOMBO)-நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நோய்ப்பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பொதுவைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீர தெரிவித்தார்.

வாரமொன்றில் 200 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேல், வடமேல், சப்ரகமுவ மாகாணங்களில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக பொதுவைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18,000 பேர் வரையில் நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

New UN chief to make first address to Security Council

Mohamed Dilsad

Speaker recognises Ranil as Opposition Leader?

Mohamed Dilsad

“SL determined to do well in T20 series” – Thisara Perera

Mohamed Dilsad

Leave a Comment