Trending News

மூன்று ஆண் பிள்ளைகளின் தாய் கொடூரமாக வெட்டிக்கொலை

(UTV|COLOMBO)-கணவன் மனைவியை கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் ஒன்று திவுலகல ஹலாதிவல பகுதியில் பதிவாகியுள்ளது.

குடும்பத்தில் காணப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக காவல் துறையினரின் விசாரணைகளின் வாயிலாக அறியகிடைத்துள்ளது.

கொலை செய்யப்பட்டவர் 33 வயதுடை தாய் என்பதுடன் அவருக்கு மூன்று ஆண் பிள்ளைகளும் காணப்படுகின்றனர்.

கடந்த 23 ஆம் திகதியன்று 7 வயதுடைய தனது மூத்த பிள்ளையை பாடசாலையிலிருந்து அழைத்து வந்த போது கணவர் வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ள நிலையில், மனைவி தகாத முறையில் தனது கணவரை நிந்தித்துள்ளதாகவும் அதற்கு நிகராக அவரும் மனைவியை நிந்தித்துள்ளார்.

இவ்வாறு வாய்தர்க்கம் அதிகரித்து செல்கையில் வீட்டிலிருந்து கத்தி ஒன்றினை கொண்டு கால் கைகளில் தாக்கிய கணவர் தலைப்பகுதியிலும் பலமாக தாக்கியுள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் மனைவி மயங்கி விழுந்ததுடன் அவரை அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமையை தொடர்ந்து கணவர் தலைமறைவாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில் நேற்றைய தினம் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Bus Crash in New Mexico

Mohamed Dilsad

Castlereagh and Wimalasurendra Reservoirs spill over

Mohamed Dilsad

සුදර්ශනීගේ සහාය සජිත් ට

Editor O

Leave a Comment